தற்பொழுது அனைத்து இளைஞர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை தான்.
காதலர் தினம் என்றாலே பொதுவாக தொலைக்காட்சிகளில் திருமணமான ஜோடிகள் மற்றும் காதலித்து வருபவர்களை வைத்து ஏதாவது புதிய நிகழ்ச்சி ஒளிபரப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் விஜய் டிவியில் காதலர் தினத்தன்று சின்னத்திரை ஜோடிகளை வைத்து காதலே காதலே என்ற ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஷோவை தொகுப்பாளினி அர்ச்சனா தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
காதலே காதலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரியா பங்கு பெற்றுள்ளார். அவ்வபோது அறந்தாங்கி நிஷா மற்றும் அவருடைய கணவர் இருவரும் இணைந்து ஆர்யாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்புகைப்படத்தில் தனது நியூ கெட்டப்பில் நடிகர் ஆரியா உள்ளார். அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
