விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வெற்றிகரமாக நிறைவுற்ற நிலையில் சக போட்டியாளர்கள் தங்களது அன்புகளை பகிர்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது தான் பிக்பாஸ் கொண்டாட்டம் சூட்டிங் முடிந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சுரேஷ் சக்ரவர்த்தியின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் செய்து உள்ளார்கள். ரியோ, சோம் சேகர், கேப்ரில்லா, அர்ச்சனா, அனிதா, ரேகா, ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவின் கணவர் ஆகியோர் சென்றுள்ளார்கள்.
சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தில் பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், நிஷா, சம்யுத்தா, சனம் ஷெட்டி, வேல்முருகன், ஆஜித், சுசித்ரா, ஆரி ஆகியோர் காணவில்லை.
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி என் வீட்டிற்கு வந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.