அனிதாவை தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் பாலாஜி வீட்டில் நிகழ்ந்த சோகம்.!! வருத்தத்தில் ரசிகர்கள்..

balaji11
balaji11

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. சமீபத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இவருடன் கலந்துகொண்டா சக போட்டியாளகளுடன் சண்டை போடாத ஆளே  கிடையாது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் நடிகர் ஆரியிடம் மிகவும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் பல ரசிகர்கள் ரெட் கார்டை கொடுத்து பாலாஜியை  வெளியே அனுப்புங்கள் என்று கூறி வந்தார்கள். இருந்தாலும் பாலாஜியின் ரசிகர்கள் பலர் இவருக்கு பெரும் ஆதரவை தெரிவித்து வந்ததால் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பெற்றார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸ் விரைவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் அவர்களின் வீட்டில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அதாவது பாலாஜி முருகதாசின் தந்தை இறந்துவிட்டார். எனவே பாலாஜி அண்ணன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பாலாஜியும் இதுவும் கடந்து போகும் என்று கூறி சோகமாக தன் பதிவை வெளியிட்டு உள்ளார்.