பிக்பாஸில் இருக்கும் திருநங்கை சமுத்திரக்கனியின் திரைப்படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.! இதோ வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக டி ஆர் பி இல் முதல் இடம் பிடிப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும்  போட்டி போட்டுக் கொண்டு புதிய ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்கள் தற்போது சினிமாவில் கொடிகட்டிப் பறந்த வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் 5 வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது இந்த பிக்பாஸ் 5 வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  அதேபோல் கடந்த நான்கு சீசன்கள் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது 5வது சீசனிலும் அரசியல் இல்லாத பல்வேறு போட்டியாளர்களை களமிறக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி.

namithamarimuthu
namithamarimuthu

மேலும் பிக்பாஸ் வீடு முன்பைவிட மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது அதிலும் ஐந்தாவது சீசன் என்பதால் ஆங்காங்கே 5 என்ற நம்பர் குறியீடு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுகங்களை களத்தில் இறங்கியுள்ளது மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக திருநங்கையை போட்டியாளர்களாக சேர்த்துள்ளார்கள்.

இவரின் பெயர் நமிதா மாரிமுத்து இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்த அவர் 2011 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறி உள்ளார் அதனை தொடர்ந்து மிஸ் சென்னை மிஸ் பாண்டிச்சேரி மிஸ்  இந்தியா என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார் அது மட்டுமில்லாமல் வேறு ஸ்பானிஷ்ல் நடந்த ஒரு அழகுப் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலந்து கொண்டார்.

namithamarimuthu
namithamarimuthu

மேலும் 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றுள்ளார். அதன் பிறகுதான் இவர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகிய நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இவர் என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

namithamarimuthu
namithamarimuthu

Leave a Comment