பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத மற்றும் பிரபலமடைய முடியாமல் தவித்து வந்த பலரும் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தங்களுக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ரைசா இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரொமான்ஸ் நிறைந்த முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக அமைந்ததால் தற்போது உள்ள இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இத்திரைப்படத்திற்கு பிறகு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கும் ரைசா நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களை கைவசம் வைத்து தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வருகிறார். ஆனால் எந்த திரைப்படமும் இதுவரையிலும் ரிலீசாகவில்லை.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்றிலும் ஹிட்டாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மேலும் சில திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தனது அழகை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மருத்துவரிடம் சர்ஜரி செய்து கொள்வதற்காக அணுகி மாற்றி சர்ஜரி செய்து கொண்டு தனது முகத்தை வீணாக்கி கொண்டார் இதன் மூலம் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வரும் ரைசா தற்போது இவருக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்துவிட்டது போலவும் இவரின் பெற்றோர் இவருக்காக மாப்பிள்ளை தேடி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.