2k அழகானது காதல் திரைப்படத்தில் ஹரிநாடாருக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை. வைரலாகும் வீடியோ.

தற்போது ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இணையதளங்களில் கலக்கி வருபவர் ஹரிநாடார் என்கின்ற கோல்ட்மேன்.  இவர் சமீபத்தில் மீனை பார்ப்பதற்கு நகைகளைக் கழட்டாமல் கடலுக்கு அடியில் சென்று  மாட்டிய கதை அனைவருக்கும் தெரிந்ததே.

இவருக்கு சின்ன வயதிலிருந்தே நகை என்றால் மிகவும் பிடிக்கும் அதற்காக மார்க்கெட்டில் எந்த ஒரு மாடல் வந்தாலும் உடனே அதை வாங்கி அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனாலேயே இவர் வீட்டிற்கு இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கு சென்றனர்.

மேலும் இந்த நிலையில் இவர் தற்போது முத்தமிழ் வர்மா என்பவர் இயக்கத்தில் 2k அழகானது காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஹரிநாடார் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vanitha1
vanitha1

இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் பூஜை நடந்தது இதற்கு  சினிமா பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வனிதா விஜயகுமார் அவர்கள் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

vanitha2k
vanitha2k

அதனை உறுதிப்படுத்தும் வகையில் வனிதா விஜயகுமார் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த வீடியோ.