வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண மாஸாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி.! வீடியோ உள்ளே

பிரபல தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அண்மையில்தான் பிக் பாஸ் சீசன் போர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரிய முதலாவது இடத்தையும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும் யுவராஜ் மூன்றாவது இடத்தையும் வென்றார்கள். ஆரி முதலாவது இடத்தை பிடித்து 50 லட்சம் வென்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆரி வென்றதை அவருடன் பங்குபெற்ற ஹவுஸ் மெட்ஸ்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 கொண்டாட்ட விழாவில் அனைவரும் ஒன்றாக புகைப்படங்கள் எடுப்பது ஆடுவது பாடுவது போன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. இதன் மூலம் தற்போது அனைவரும் ஆரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் ஆரி என்றி கொடுக்கும் பொழுது பைக்கில் வந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடினார். இதனைப் பார்த்த அனைவரும் வாயடைத்து போய் நின்றார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இதோ அந்த வீடியோ.