2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டச்சுழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆரி. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா உட்பட இன்னும் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் இவருக்கென்று சினிமாவில்அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது விஜய் மற்றும் அஜித்திற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு ஆரிக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் ஆரிக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
அந்தவகையில் தற்போது படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் ஆரி புதிய படத்திற்கான ஹேர் ஸ்டைலில் நியூ லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.