biggboss 8th day 3rd promo aranthangi nisha and other housemates crying video: விஜய் டிவியில் ரசிகர்களால் பெருமளவில் தற்போது விரும்பி பார்க்க படுவது பிக் பாஸ் சீசன் போர், எட்டாவது நாள் விறுவிறுப்பாக போய்க் கண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலையில் முதல் ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன், சம்யுக்தா மற்றும் அஜித் போன்றோரை நாமினேட் செய்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ சிவானி நாராயணனுக்கு தற்போது ஆர்மி ஆரம்பித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது நாமினேட் ஆனது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருந்தாலும் அவர் வெளியாக மாட்டார் என அவர்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. காரணம் இவர் இதுவரை இந்த வீட்டில் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடவில்லை என்பதே. இதனைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியாகியது. இந்த ப்ரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ரியோவும் சண்டை போடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா கதறி அழுகிறார். அதுமட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அவர் தனது குழந்தையுடன் பேசுகிறார். அவர் குழந்தை அப்போது அழுகிறது இதற்காக வீட்டில் உள்ள அனைத்து ஹவுஸ் மேட்களும் அழகின்றனர்.
தற்போது அந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
#Day8 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/AEoeJlCFET
— Vijay Television (@vijaytelevision) October 12, 2020