பிக் பாஸ் எட்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது இதில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள் அதில் ரவீந்தர் சந்திரசேகர், ஆனந்தி அன்சிதா, அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, ஜாக்லின், பவித்ரா, தர்ஷா குப்தா, சத்யா என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த பிக் பாஸ் எட்டாவது சீசனில் 24 மணி நேரத்திற்குள் சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் மேலும் உடல் எடை அதிகமாக இருக்கும் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிற்கு கலந்து கொண்டார் அவரால் நடக்க கூட முடியாத நிலையில் இந்த திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது அவருக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்பட்டது.
பிராங்க் என்ற பெயரில் ரஞ்சித் ரவீந்தர் இருவரும் மோதி கொண்டார்கள் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டது மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதிக அளவு உண்மை தன்மையில்லாதவராக ரவீந்தர் அவர்கள் மீது முத்திரை குத்தினார்கள் மற்ற போட்டியாளர்கள்.
அதேபோல் கடந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் ஜாக்லின், முத்துக்குமார், சவுந்தர்யா, ரஞ்சித், அருண், ரவீந்தர், ஆகியவர்கள் இடம் பெற்றிருந்தார்கள். இதில் ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்டு கடைசியில் ரவீந்திரர் தான் வெளியேற்றப்பட்டார்.
அரவிந்தர் வெளியே செல்வதற்கு முன்பு சக போட்டியாளர்களை பற்றி ஒவ்வொருவராக தோலுரித்துக் காட்டினார் இது அனைவரையும் பிரமிக்க வைத்தது அதில் அவர் கூறியதாவது அரணவ் தான் பேக் என்றார் அதேபோல் இரண்டாவதாக ரஞ்சித், செல்லம், தங்கம் இவர்களெல்லாம் ஒரு கேம் பிளான் தான்.
தீபக் பற்றி கூறிய ரவிந்தர் எதிரியை முன்னாடி தான் அடிக்கணும் முன்னாடி தான் பேசணும் பின்னாடி பேசக்கூடாது என அடுக்கடுக்காக விமர்சனங்களை முன் வைத்தார் ஆண்களிடம் ஜால்ரா இருக்கு மனசாட்சி தான் பெரிய கேமரா அது அதன்படி விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இப்படி ஒவ்வொரு போட்டியாளராக கூறிக் கொண்டு வந்த ரவீந்தர் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது அதாவது ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழு நாட்கள் இருந்த நிலையில் 3.5 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.