Bigg boss 7 : வீட்டை விட்டு வெளியேறிய விஜய் வர்மா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Vijay
Vijay

Biggboss 7 : கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் 7 -வது சீசன் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது.. இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் என இரு வீடு கான்செப்ட்..

அமைக்கப்பட்டு இரு அணியாக பிரிந்து விளையாண்டு வருகின்றனர். வழக்கம்போல் இந்த சீசனையும் கோலாகலமாக கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் எவிக்க்ஷன் நடைபெறும் அதில் முதல் வார எவிக்ஷனில் அனன்யா வெளியேற..

வெங்கட் பிரபு சார் இன்னைக்கு “விஜயதசமி” அந்த ஸ்கிரிப்ட் அனுப்பிச்சா பூஜையை போடலாம்.. மரணமாய் கலாய்க்கும் தளபதி 68 டீம்

அவரைத்தொடர்ந்து பாபா செல்லத்துரை சில காரணங்களால் பிக்பாஸ் இடம் அனுமதி கேட்டு வீட்டை விட்டு வெளியேறினார் பிறகு இரண்டாவது வாரம் எவிக்ஷன் இல்லை என கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார் இந்த நிலையில் கடந்த வாரம் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மூன்று போட்டியாளர்கள்..

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற மீதம் இருக்கும் 15 போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த வார இறுதியில் கமலஹாசன் வருகின்ற எபிசோடுகளில் வைல்டு கார்டு என்ட்ரியாக 5 போட்டியாளர்களை இறக்க உள்ளதாக புரோமோ வெளியாகியது.

இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை.. அனிருத் இசையமைக்க போகும் 10 மெகா பட்ஜெட் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்.

அதனால் ரசிகர்கள் அந்த ஐந்து போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என எதிர்பார்த்து வருகின்றனர்.. இந்த நிலையில் கடந்த வாரம் எவிட்டான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.. ஒரு நாளைக்கு 15000 என அவர் இருந்த 21 நாளைக்கும் 3 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது..