தொலைக்காட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதலிடத்தை பிடிப்பதற்காக புதுப்புது ரியாலிட்டி ஷோக்கல் சீரியல்கள் என ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி டி ஆர் பி இல் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது விஜய் தொலைக்காட்சி அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் ஆறாவது சீசனை விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறார்கள் இது குறித்து முதல் பிரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. மேலும் பிக்பாஸ் 6வது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் இந்த ஆறாவது சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
நீ இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகவும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் 10 பெண் போட்டியாளர்களை களமிறக்க இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதில் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி கலந்துகொள்ள இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் செல்ல பிள்ளையாக பல வருடமாக இருக்கும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி கலந்து கொள்ள இருக்கிறார் மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர்களும் இந்த பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ரீநிதி கலந்து கொள்ள இருக்கிறார்.
இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை திரைப்படத்தை விமர்சித்தும் சிம்புவை காதலிப்பதாக கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார். வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்த மனிஷா யாதவ் தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாதன் ஈஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி விஜே அஞ்சனா ஆகியோர் பிக் பாஸ் 6 ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இப்படி 10 பெண் போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள இருப்பதால் பிக் பாஸ் ஆறாவது சீசன் கலைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.