விஜய் டிவி தொலைக்காட்சி TRP யில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பல சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக ஃபேமஸான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக் பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசனையும் அண்மையில் தொடங்கியது.
வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் முன்பை விட இந்த தடவை உலக நாயகன் கமலஹாசனுக்கு அதிக சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் 6 வது சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜி பி முத்து சில காரணங்களால் வெளியேறினார்.
அவரை தவிர மற்றவர்கள் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக பிக் பாஸ் வீட்டை விட்டு குயின்சி வெளியேறினார். மற்ற சீசனை விட இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இன்னும் இருக்கின்ற பெரும்பாலான போட்டியாளர்கள் வாய் சண்டை அல்லது அடித்துக் கொள்வதுமாகவே இருக்கின்றனர்.
இதுவும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இருப்பினும் சண்டை போட்டுக் கொள்பவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இனி தொடர்ந்து வாரம் வாரம் எலிமினேஷன் டாஸ் நடந்து இருக்கிறது அதே சமயம் மறுபக்கம் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருவது..
போட்டிகள் என இனி வருகின்ற நாட்கள் செம்ம ஜொலியாக இருக்கும் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் டாஸ்க் நடந்து உள்ளது இதில் யார் யார் சிக்கி உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..