விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பட்டாலும் மிகப்பெரிய அளவில் காத்திருக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி அதில் அவர்களைப் பற்றி பல விஷயங்களை பதிவிட்டு வருகிறார்கள் சமூக வலைதளத்தில்.
இந்த நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக தொடங்கியது இந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஜி பி முத்து, அமுதவாணன் தனலட்சுமி, மகாலட்சுமி, ஜனனி, ஆயிஷா, அசிம் ,மகேஸ்வரி, எனா 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் 20 போட்டியாளர்கள் டீ ம் டீம் ஆக பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்திலேயே காதல், சண்டை என பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. அதிலும் ஜி பி முத்துவின் மீதுதான் ரசிகர்களின் பார்வை இருந்து வருகிறது ஏனென்றால் அவர் ஏற்கனவே சமூக வலைதளத்தை ஒரு கலக்கு கலக்கியவர் அதனால் பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் ஜி பி முத்துவை தான் டார்கெட் செய்து வருகிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரமே முடியாத நிலையில் அதற்குள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லப் போவது யார் என்ற சலசலப்பு துவங்கிவிட்டது.. ஏற்கனவே அடுத்த வாரத்திற்கான நேரடியான நாமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, விக்ரமன், அசிம் ஆகியவர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக வெளியே செல்ல போவது தனலட்சுமி என நேட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் சமீபத்தில் வெளியாகிய எபிசோடில் ப்ரோமோ வீடியோவில் ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என தனலட்சுமி கூறியுள்ளார் இதைப் பார்த்த ஜிபி முத்துவின் ரசிகர்கள் பலரும் அடுத்த வார எளிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர்தான் முதல் நபராக வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறி வருகிறார்கள் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.