தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர் பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக புதுப்புது நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் சீரியல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பு ஓட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில்தான் நான்காவது சீசன் முடிவடைந்தது இந்த சீசனில் முதலிடத்தில் ஆரியும் இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்புவது போல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பி வருகிறார்கள். கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் போகிறார்கள் என செய்திகள் வெளியானது.
ஆனால் அதனை முற்றிலுமாக மறுத்தது என் டி மால் நிறுவனம். இந்த நிலையில் அடுத்த நிகழ்ச்சியை எந்த தொலைக்காட்சி ஒளிபரப்ப போகிறது என மிகப்பெரிய சந்தேகம் எழுந்த நிலையில் அடுத்த சீசனும் விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்ப போகிறார்கள் என உறுதியாகியுள்ளது அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட்டிங்கில் கமல் இருப்பதுபோல் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் மாதம் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.
ஆரம்பிக்கலாமா? 😎 #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/Nozd1mE21X
— Vijay Television (@vijaytelevision) August 31, 2021