விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3யின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தர்ஷன். இந்நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றியாளராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் பிக்பாஸ் 4ரில் கலந்துகொண்ட சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை காதலித்ததாகவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் தற்பொழுது திருமணம் செய்துகொள்ள மாட்டேங்கிறார் என்று போலீசாரிடம் கம்லைண்ட் செய்திருந்தார்.
இவ்வாறு பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருந்தது. தற்பொழுது தர்ஷன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பிக்பாஸ் 4-ல் சனம் நன்றாக விளையாடி இருந்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சனம் செட்டி உடன் உள்ள உறவைப் பற்றி பேச விரும்பவில்லை.
தற்பொழுது நான் லாஸ்லியா உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறேன். ஒரு புது நடிகையுடன் நடிக்க வேண்டுமென்றால் அவரைப் புரிந்து கொள்வதற்கு ரொம்ப நாள் ஆகி விடும் ஆனால் லாஸ்லியாவை பற்றி நன்றாக தெரிந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது அதிலும் லாஸ்லியா இலங்கை பெண்ணாக நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளேன் 2021 மிகவும் நன்றாக எனக்கு அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.