தமிழ் சினிமாவிற்கு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. இப்படத்தில் இவர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் அந்தரங்க பிரச்சனைகள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று செய்தி தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அந்த சேனலை யார் அரம்பித்திருப்பார் என்று அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.
அது வேறு யாருமில்லை ரேஷ்மா தான் இப்படி ஒரு சேனலை அறிவித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையில் நடந்த பல சோகக் கதைகளைக் கூறி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்பொழுது டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்து வரும் 3:33 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அந்தரங்க பிரச்சினைகளுக்கான யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் அதிலும் பெண்களுக்கு முக்கியமாக என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த வீடியோ..