சின்னத்திரை கலைஞர்கள் பலரும் வெள்ளித்திரையில் பயணிக்க ஒரு நல்ல பிளாட்பார்ம் ஆக அமைவது பிக் பாஸ் நிகழ்ச்சி. அப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பலரும் தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து ஓடுகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் 5 யில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ராஜூ ஜெயமோகன் .
இவர் ஒரு சின்னத்திரை சீரியல் நடிகர். கனா காணும் காலங்கள், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் ராஜு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து அந்த சீசன் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்றார். மேலும் இதற்கு முன் ராஜு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதனால் பிக் பாஸ் டைட்டில் வின் செய்த பிறகு வெள்ளித்திரையில் பல வாய்ப்புகள் கிடைக்கும் என ராஜு மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பெரிதும் வாய்ப்புகள் கிடைத்த மாதிரி தெரியவில்லை ஏனென்றால் ராஜூ தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள், ராஜு வீட்ல பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதிலும் அவர் தொகுத்து வழங்கி வரும் ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்து போய் செம சூப்பராக ஓடி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதிய கெஸ்டுகள் அல்லது சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மக்களை என்டர்டைமென்ட் செய்து வருகின்றனர். அப்படி சென்ற வாரம் ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் கலந்து கொண்டது.
அப்போது பேசிய ராஜு நான் பாண்டியன் ஸ்டோர் கதிர் கதாபாத்திரத்திற்கு ஆடிஷனில் கலந்து கொண்டேன் ஆனால் அப்போது என்னை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கவில்லை மேலும் ஜீவா கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் சென்றேன் அப்போதும் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என ராஜு கூறியுள்ளார்.