பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து சென்று அசிங்க படுத்திட்டாங்க.! கதறும் பிரபல நடிகை…

bigg-boss
bigg-boss

ரசிகர்களிடம் வீணாக ஓட்டு வாங்கி போட்டியாளர்களை எலிமினேஷன் என்ற பெயரில் போலியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதாக கூறியுள்ளார் பிரபல நடிகையின் மகள் அபிநயா ஸ்ரீ.

தென்னிந்தியாவை பொறுத்த வரை தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் டி ஆர் பி ல் டாப் லிஸ்டில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். தென்னிந்திய முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலம் என்று தான் சொல்ல வேண்டும் 100 நாட்கள் செலிபிரிட்டிஸ்களை ஒரு வீட்டிற்குள் தங்க வைத்து ரசிகர்கள் மூலம் ஒடிங் பெற்று யார் வெற்றியாளர்கள் என உறுதி படுத்துபது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் மேலும் பிக் பாஸ் ஐந்து சீசர்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 முடிவடைந்துவிட்டது.

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ல் பிரபல நடிகை அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீ கலந்து கொண்டுள்ளார். என் நிலையில் இவர் கொடுத்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் இவர் கூறியதாவது நாம் நினைப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பதில்லை. பிக் பாஸ் வீட்டில் தன்னை அவர்கள் காட்டுவதே இல்லை.என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழ் பிக் பாஸ் இன் தொகுப்பாளர் கமல்ஹாசனை போல இல்லாமல் தெலுங்கு பிக் பாஸ் நாகார்ஜுனா அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் அவருக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே உரையாடல் நடத்தியதாகவும் என்னிடம் பேசுவது கூட இல்லை என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அபிநயா ஸ்ரீ.

அதனை தொடர்ந்து  நடிகை அபிநயாஸ்ரீ தாயார் அனுராதா பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுவனத்திற்கு போன் செய்து ஏன் தன் மகளை காட்டவில்லை என்று கேட்டதாகவும் தன்னை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அபிநயஸ்ரீ கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தேவையில்லாமல் ரசிகர்களிடம் ஓட்டு வாங்கி எலிமினேஷன் என்ற பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சி கண்தொடைப்பை நடத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.