விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த 6 சீசன்களையும் தொகுத்து வழங்கி வரும் நிலையில் டிஆர்பியில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி ரீச்சாகி இருக்கும் நிலையில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து 7வது சீசன் அறிமுகமாக இருக்கிறது.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் துவங்க இருக்கிறார்கள் இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும் இதன் மூலம் சிலர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்களில் ஒருவரான ராஜு நிலமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளர்களாக பங்கு பெற்று தங்களுக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். முகம் தெரியாத பலருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்து வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலரும் நடிகர்களாகவும், நடிகைகளாகவும், இயக்குனர்களாகவும், நடன இயக்குனர்களாகவும் மாறி வருகிறார்கள்.
அப்படி கடந்த 5 சீசனின் வெற்றியாளராக மகுடம் சூட்டிய அவர்தான் ராஜு. மற்ற சீசன்களில் கிடைக்காத அளவிற்கு மக்கள் மத்தியில் ராஜுவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது எனவே நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவர் நல்ல இடத்திற்கு சென்று விடுவார் என பலரும் எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வரும் நிலையில் பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்த்த ராஜூக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டிருப்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனனிடம் பிக்பாஸ் ராஜூ பற்றி கேட்கும் பொழுது அதில் அவர் ஒரு பெரிய கம்பெனியில் ஒரு படத்தை இயக்கம் பொறுப்பை ராஜு ஏற்று இருப்பதாகவும் அந்த கதை விதத்தினை பாக்யராஜிடம் ஆலோசனை நடத்திக் கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.