விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையிலான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக மக்களுக்கு ரொம்ப பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக் பாஸ் இதுவரை 5 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசனும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜி பி முத்து மட்டும் சில காரணங்களால் வெளியேறினார் மற்றவர்கள் அனைவரும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதம் அந்த வகையில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்ததில் இருந்தே அனல் பறக்க ஆரம்பித்தது
இவருக்கும் அசீமுக்கும் தொடர்ந்து வாக்குவாதம் சண்டைகள் தான் வந்தன. ஒரு கட்டத்தில் கடுப்பான ரசிகர்கள் தனலட்சுமிக்கு குறைந்த ஓட்டுகளை போட்டு வெளியேற்றினார் வெளியே வந்த அவர் சமீபத்தை பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
முதல் கேள்வியாக பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என கேள்வி எழுப்பினர் அதற்கு அசீம் தான் என தெரிவித்தார். அவர்தான் இந்த கேம்மை சரியாக விளையாடி வருகிறார் என தெரிவித்தார் மேலும் பேசிய அவர் வீட்டுக்குள் இருக்கும் போது எனக்கும் அவருக்கும் இடையே..
சில கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும் வெளியே வந்து பார்க்கும் பொழுது அவர்தான் சரியாக விளையாடுகிறார் என தெரிய வருகிறது நானும் அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன் என கூறினார் தொடர்ந்து பேசிய அவர் பிக் பாஸ் டைட்டில் வெல்ல அசீம் அவர்களுக்கு தான் அதிக வாய்ப்பு என தெரிவித்தார்..