ஒவ்வொரு தொலைக்காட்சியும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக புதிய புதிய ரியலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அப்படி கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடைய மிகவும் பிரபலமடைந்துது.
இந்த நிலையில் இந்த வருடம் ஆறாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த ஆறாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நேற்று மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று தொடங்கியுள்ளது. இதில் யார் யார் நாமினிஷன் செய்யப்பட்டுள்ளார் என தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர், அசின், நிவாஸினி, தனலட்சுமி, ஜானி ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஐந்து நபர்களில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ரசிகர்களும் தங்களுக்கு பிடிக்காத நபர்களை கூறி வருகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மக்களிடம் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றுள்ள நிவாஷினி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இன்னும் நாட்கள் இருப்பதால் நிவாஷினி குறைந்த வாக்குகளில் இருந்து தப்பிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது ஆனால் எப்படி வேணாலும் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பிரமோ நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது 36 ஆவது நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருவதால் சுவாரசியம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது இந்த ப்ரோமோவில் நாமினேஷன் யார் யார் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.
#Day36 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/K5Ni1AyPKQ
— Vijay Television (@vijaytelevision) November 14, 2022