Bigg Boss Tamil Season 8 17th October 2024 – Promo 1 : பிக் பாஸ் எட்டாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் குறைந்த வாக்குகளை பெற்று ரவீந்தர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 11 நாட்கள் ஆகியுள்ளன இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது முதல் ப்ரோமோ வீடியோவே மிகவும் பரபரப்பாக இருக்கிறது ஏனென்றால் பிக் பாஸ் சொன்ன டாஸ்க் போட்டியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எப்படியாவது இருக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள் அந்த வகையில் ஆண்கள் அணி பெண்கள் அணி என இரண்டு டீமாக பிக் பாஸ் பிரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இரண்டு டீம்களுக்கும் சரியான போட்டி நிலவி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் ஒரு புதிய போட்டியை விளையாட வைத்துள்ளார் அதாவது எந்த வீடு அறிவில் சிறந்தது திறமையில் சிறந்தது என போட்டி நடைபெற்று வருகிறது இதில் பிக் பாஸ் ஒரு கேள்வியை கேட்கிறார் அதற்கு இரு வீட்டாரிடம் இருந்து பதில் வர வேண்டும்.
யார் முதலில் சொல்கிறார்களோ அவர்கள் தான் வின். அப்படி எந்த வீடு வின் பண்ணுகிறதோ அந்த வீட்டிலிருந்து ஒரு நபர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பார் என பிக் பாஸ் கூறியுள்ளார் அதனால் இரு வீட்டார் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.