அட்ரா சக்க கதை அப்படி போகுதா.! அப்போ ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது.! அட இவங்க ரெண்டு பேரும் காதலர்களா.?

raveena dhaha
raveena dhaha

Bigg Boss Tamil Season 7 : பிக் பாஸ் 7 வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. ஏற்கனவே வெளியாகிய பிக் பாஸ் சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் இந்த முறை இரண்டு வீடு புதிய ரூல்ஸ் புதிய விளையாட்டு என அனைத்தும் புதுமையாக இருக்கின்றன.

கண்டிப்பாக இந்த பிக் பாஸ் 7 சீசன் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் உள்ளே சென்றார் அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் ஏழரை என கூறிக் கொண்டே சென்றார். இவரை தொடர்ந்து இரண்டாவதாக பூர்ணிமா ரவி மூன்றாவது போட்டியாளராக ரவீனா, நான்காவது போட்டியாளராக பிரதீப் ஆண்டனி, நிவிஷா ரக்சன் என பல போட்டியாளர்கள் உள்ளே சென்றார்கள்.

இந்த நிலையில் மணிச்சந்திரா நடனம் நன்கு தெரிந்தவர் இவர் ஜோடி சீசன் 9ல் பட்டத்தை வென்றார் அதுமட்டுமில்லாமல் கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1 அரை இறுதி வரை சென்றார் மேலும் மானாட மயிலாட சீசன் பத்தில் இவரது பயணம் தொடங்கியது தற்பொழுது மணிச்சந்திரா விஜய் தொலைக்காட்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறாராம்.

இவரின் நடன பயணம் 10 வயதில் தொடங்கியது கோவில் கோவில் திருவிழா என நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் ரவீனாவும் இவரும் முன்னதாக காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது இருவரும் சேர்ந்து வெளிநாட்டுக்கு கூட சென்று வந்ததாக கூறப்படுகிறது இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள் என்றால் கண்டிப்பாக ஏதோ ரகளை இருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை இவர்கள் மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கலாம் அல்லது ரொமான்ஸ்க்கு பஞ்சமே இல்லாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.