அன்பு காட்டினால் சண்டை போட முடியாது.. வன்மம் இல்லைன்னா வாழவே முடியாது.. பிக் பாஸ் போட்டியாளர்களின் உருட்டு..

bigg boss tamil season 7
bigg boss tamil season 7

bigg boss tamil season 7  : பிக் பாஸ் நிகழ்ச்சி வருடா வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 75 நாட்கள் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் ஏற்கனவே பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் சமீபத்தில் மிடில் எவிக்ஷனில் அனன்யா வெளியே சென்றார். மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சில போட்டியாளர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சுவாரசியமே இல்லாமல் விளையாடும் சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் யார் வெளியேறி உள்ளார் என்பது தெரியவந்தது அதாவது கூல் சுரேஷ் இந்த வார எவிக்ஷனில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் 7 வது சீசனில் புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அன்பு அதிர்ஷ்டம் திறமை விட முயற்சி சகிப்புத்தன்மை என ஒரு போர்டில் எழுதப்பட்டுள்ளது அதில் எது அதிகமாக இருக்கிறது? எது குறைவாக இருக்கிறது என்பதை போட்டியாளர்கள் கூற வேண்டும் கமல் கேள்வி கேட்கும் பொழுது விஷ்ணு அன்பு என்னால் யாரிடமும் காட்ட முடியாது அப்படி அன்பு காட்டினால் சண்டை போட முடியாது என கூறுகிறார் இதனால் கமல் சிரிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து விசித்ராவும் அன்பை கூறுகிறார் அடுத்ததாக  ரவீனா வன்மத்தை பற்றி கூறுகிறார் வன்மம் இல்லாமல் இந்த போட்டியில் ஜெயிக்க முடியாது என்பது போல் பேச நீங்க எல்லாம் சொல்வதை வைத்து பார்த்தால் வாழ்க்கையில் வன்மம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக தோன்றுகிறது என கமல் பேசுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.