bigg boss tamil season 7 :பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது 100 நாட்களுக்கு மேல் கடந்து தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பூர்ணிமா 16 லட்சத்தை எடுத்து வெளியே சென்றார் அவரை தொடர்ந்து விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார் இது ரசிகர்களை மிகவும் பாதித்தது.
இப்படி அடுத்தடுத்து வெளியே செல்வதால் அடுத்ததாக யார் வெளியே செல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது இந்த நிலையில் 100வது நாளை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் அடுத்ததாக மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியே சென்றார்.
என்ன வேணா சொல்லுங்க.. அந்த விஷயத்தில் ரஜினியை விட மேலானவர் விஜயகாந்த்.!
இந்த நிலையில் மீண்டும் இந்த வாரம் மிட் வீக் எவிக்சன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது விஜய் வர்மா வெளியே சென்ற பிறகு பிக் பாஸ் வீட்டில் மீதம் ஐந்து பேர் இருக்கிறார்கள் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, மணி, மாயா ஆகியோர்கள் உள்ளே இருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றியாளர் என்று பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் மீண்டும் ஒரு டூவிஸ்ட் வைத்துள்ளார் அதாவது ஏற்கனவே விஷ்ணு நேரடியாக பைனல் லிஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் அப்படி இருக்கும் நிலையில் விஜய் வர்மாவை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஒரு எவிக்சன் நடைபெற இருக்கிறது இதில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் மாயாவிற்கு அதிக வாக்குகள் இருப்பதால் அவர்கள் கண்டிப்பாக வெளியே செல்ல மாட்டார்.
ஆனால் தினேஷ் மற்றும் மணி இருவரும் குறைந்த வாக்குகள் வாங்கியுள்ளதால் இவர்களில் ஒருவர் தான் வெளியே செல்ல இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இதில் மணி தான் அடுத்தது வெளியே செல்வார் என பலரும் கணித்துள்ளார்கள் என்ன நடக்கும் என்பதை இனி வரும் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.