bigg boss tamil season 7 contestant bava chelladurai family photos: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்ட பவா செல்லதுரையின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி முதல் வாரம் ஏராளமான பிரச்சனைகளுடன் ஒளிபரப்பாகி வந்தது அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறியுள்ளார். இதனை அடுத்து இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என பவா செல்லதுரை வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த சீசனில் அனன்யா ராவ்வை வெளியேற்றி விட்டீர்கள் அதற்கு பதிலாக பவா செல்லதுரையை வெளியேற்றி இருக்க வேண்டும் என அனன்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த வருகிறார்கள். மேலும் மீண்டும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் நல்லது எனவும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு பவா செல்லதுரை திடீரென வெளியேறி இருக்கும் நிலையில் தற்போது இவருடைய குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பவா செல்லதுரை தமிழ் சிறுகதை எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். இவர் மொழிபெயர்ப்பாளர், நடிகர், கதை சொல்லி என பன்முக திறமைகளை கொண்டவர்.
தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்துள்ளார். திருவண்ணாமலை வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். பவா செல்லதுரைக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவ்வாறு தற்பொழுது இவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.