bigg boss tamil season 7 contestant Ananya rao salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மாடல் அழகி அனன்யா ராவ் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
துவங்கிய முதல் வாரத்திலேயே ஏராளமான சர்ச்சைகள், சண்டை சச்சரவுகள் இருந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு இருக்கும் இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மற்ற சீசன்களை விட இந்த சீசனில் இரண்டு வீடுகள், புதிய விதிமுறை என எதிர்பாராததை எதிர்பாருங்க இன்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு இந்த சீசன் துவங்கியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரையிலும் நடந்த சீசன்களின் முதல் வாரத்தில் எவிக்ஷன் நடைபெறாதது வழக்கம்.
ஆனால் சீசன் 7ல் முதல் வாரமே நாமினேஷன் செய்யப்பட்டு எவிக்ஷனும் நடைபெற்று உள்ளது. மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பவா செல்லதுரை தான் எலிமினேட் ஆவார் என எதிர்பார்த்து வந்தனர் ஆனால் திடீரென அனன்யா வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
அப்படி அனன்யாவும், நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன் ஆனால் இப்படி நடந்திருச்சு என ஏமாற்றத்துடன் பேசியிருந்தார். விசித்ரா இவருடைய டாட்டூ குறிப்பு விமர்சனம் செய்தது தவறு என்பதை அனன்யா அனைவரும் முன்பும் எடுத்து வைத்தார் அதற்கு கமலும் அறிவுரை கூறினார்.
இவ்வாறு அனன்யா பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளனர். அதன்படி மொத்தம் 7 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனன்யாவிற்கு மொத்தம் ரூ.88 ஆயிரம் சம்பளம் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.