Bigg boss tamil 7 season : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் பலரும் இந்த பிரபலங்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு எனக் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல் : பிக் பாஸ் சீசன் 6 ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த ரியாலிட்டி ஷோவில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிலையில் தற்பொழுது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 க்கு ரெடியாகிவிட்டார்கள் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 க்காண கவுண்டன் ரெடி ஆகிவிட்டது போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு புதிய என்டர்டைன்மெண்டுடன் பல திருப்பங்களுடன் பிக் பாஸ் 7 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே போல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் 7 october 1ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடக்க விழா நடைபெறும் என டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சி இணைந்து ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் 7 சீசன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் தற்பொழுது இவர்கள்தான் போட்டியாளர்கள் என ஒரு பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரேகா நாயர்:
நாம் இருவர் நமக்கு இருவர், பகல் நிலவு, பாலா கணபதி, வம்சம் என பல சீரியல் நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் ரேகா நாயர் இவர் பிக் பாஸ் 7 ல் பங்கேற்க இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது.
பவித்ரா:
வி ஜே வாக வலம் வரும் பவித்ரா இதற்கு முன்பு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் இவரும் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளன. இவர் நிலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.
ராஜலட்சுமி:
பிரபல நாட்டுப்புறப் பாடகி சூப்பர் சிங்கர் 6 கலந்து கொண்ட ராஜலட்சுமி அவர்களும் பிக் பாஸ் 7 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மாகாபா ஆனந்த் :
சூப்பர் சிங்கர் திருமதி சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மாகாபா ஆனந்த் கமலஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோவிகா :
வனிதா விஜயகுமாரின் வாரிசான ஜோவிகா பிக் பாஸ் தமிழ் 7 வது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதற்கு முன்பு வனிதா விஜயகுமார் பிக் பாஸ் மூன்றில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவனா பாலகிருஷ்ணன் :
மா கா பா ஆனந்த் அவர்களைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் தொகுப்பாளராக இருந்து வந்த பாவனா பாலகிருஷ்ணன் தற்பொழுது இந்த பிக் பாஸ் 7 வது சீசன் போட்டியாளர்களின் வதந்திகள் லிஸ்டில் இணைந்துள்ளார்.
ஸ்ரீதேவி :
1992 ஆம் ஆண்டு வெளியாகிய ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்த விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி இந்த பிக் பாஸ் 7 வது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பயில்வான் ரங்கநாதன் :
பிரபல பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதனும் பிக் பாஸ் 7 ல் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் இரண்டாக இருக்கும் வீடு நான்காக மாறிவிடும்.
இவர்களைத் தொடர்ந்து சர்வேயர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா, பிரபல செய்தி நிருபராக இருந்து வரும் ரஞ்சித் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு வந்த அம்மு அபிராமி ரோஷினி ஆகியோர்களும் கலந்து கொள்ள இருப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளது.