தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தார். பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது அந்த வகையில் திரிஷாவும் சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 90ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரிக் கொடுத்தார்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பிறகு எப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். மேலும் ராங்கி என்ற திரைப்படத்திலும் நடித்த முடித்துள்ள இவர் இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை திரிஷாவின் இழ்ந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குந்தவையாக நடிகை திரிஷா அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. எனவே இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருந்து வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பிரிதளவு ஈர்த்துள்ளது எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷா போல பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதி மாறிவுள்ளார்.
ஸ்ருதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்டு பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் மாடல் என்பதும் அனைவருக்கும் தெரியும் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்துள்ள இவர் தற்பொழுது குந்தவை த்ரிஷா போல அலங்காரம் செய்து கொண்டு வெளியிட்டுவுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.