தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன்கள் அனைத்தும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்புப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த 21 போட்டியாளர்களில் ஒருவர்தான் சிவின். இவர் பிக் பாஸ் போட்டியில் டாப் 3ல் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சிவின் தற்போது வரையிலும் பிக் பாஸில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் சிவின் நடிகர் விஜய் போலவே நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர், நடன ஆசிரியர், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் போக்கிரி.
இந்த திரைப்படம் வெளியாகி நடிகர் விஜய் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “என் செல்லப்பேரு ஆப்பிள்” என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் தங்களுடைய இணையதள பக்கங்களில் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் பிரபலமான சிவின் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்தப் பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களும் இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…