ஜி.பி.முத்துவிற்கு பதிலாக கொடூர வில்லனை அறிமுகப்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

gp muthu
gp muthu

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகவும் பிரமாண்டமாக அறிமுகமாக இருக்கிறது மேலும் 21 போட்டியாளர்கள் பங்கு பெற்று மிகவும் சிறப்பாக தங்களுடைய ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ஜிபி முத்து இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியேறினார். இவருக்கு தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் கூறி வெளியேறி நிலையில் இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் ஜிபி முத்து எனக்கு பணம், புகழ் என எதுவும் வேணாம் என்னுடைய மகன்தான் முக்கியம் என்னை அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறினார்.

எனவே இவரை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று சாந்தி அவர்கள் நாமினேட்டானார். இவ்வாறு தற்பொழுது 19 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஜிபி முத்துவிற்கு பதிலாக யார் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

mansur alikan
mansur alikan

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையிலும் வெளியாகவில்லை.

மேலும் இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆயிஷாவும் மூன்று, நான்கு முறை மயக்கம் போட்டு விழுந்த நிலையில் மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் எனவே இவரும் தொடர்ந்து நிகழ்ச்சியில் பயணிக்க முடியுமா இல்லை முடியாத என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.