விளம்பரம் செய்ததால் பிக்பாஸ் ஷிவானி நாராயணனை பங்கம் செய்யும் ரசிகர்கள்.!

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்தார் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் நிலை வர வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானிக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் கடைசியில் தோல்வியை அடைந்தது அதாவது பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு ஷிவானிக்கு கிடைக்கவில்லை மேலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

ஆனால் பெரிதாக இந்த படத்தில் இவரின் கேரக்டர் பேசப்படவில்லை சில நிமிடங்கள் கூட அவர் வர மாட்டார் என்பதுதான் அவருடைய ரோல் பெரிதாக பேசப்படவில்லை. தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிவானி நாராயணன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக gambling app க்கு விளம்பரம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மிகவும் கடுமையாக விலாசி வருகிறார்கள். பணத்திற்காக இப்படி இறங்கி விட்டாயா என ட்ரோல் செய்கின்றனர்.இருந்தாலும் இது போன்று ஏராளமான நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அதேபோன்று ஷிவானி நாராயணனும் விளம்பரம் செய்வதில் தப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க எங்கு கிளிக் செய்யவும்..