மாகாபாவின் திருமண நாள் பார்ட்டிக்கு மாடர்ன் உடையில் வந்து அசத்திய ஷிவானி நாராயணனின் அம்மா.! அழகில் மகளையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல.! வைரலாகும் புகைப்படம்.

shivani narayanan and his mother
shivani narayanan and his mother

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத் திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலுக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் இரட்டை ரோஜா  சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்ட பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றி வருவதால் பலர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

அதோடு ஷிவானியின் அம்மா இந்நிகழ்ச்சியில் வரும்பொழுது ஷிவானியை மிகவும் கோவமாக திட்டியதால் ஷிவானியின் அம்மாவையும் சிலர் திட்டினார்கள். இதன்பிறகே ஷிவானி முழுவதுமாக மாறி நிகழ்ச்சியில் இருந்து வெளியே போகும் பொழுது சிங்கப் பெண் என்ற சிறப்புடன் வெளியில் சென்றார்.

ஒரு பேட்டியில் ஷிவானி சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் விரைவில் அத்திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.  இந்நிலையில் தொடர்ந்து ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சிவானி மற்றும் அவருடைய அம்மா இருவரும் மாகாபா நேற்று கொண்டாடிய 15வது திருமண நாளை முன்னிட்டு பார்ட்டி வைத்திருந்தார்கள். அதில் ஷிவானி தனது அம்மாவுடன் கலந்துகொண்டுள்ளார்.

அந்தப் பார்ட்டியில் ஷிவானி நாராயணன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷிவானியை விட ஷிவாவின் அம்மா தான் சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

shivani mother
shivani mother