Bigg Boss season 7 today promo 3: 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். முதல் வாரத்தில் அனன்யா குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவரை அடுத்து அடுத்த நாளே பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இவ்வாறு போட்டியாளர்கள் புதிய டாஸ்குகளுடன் தொடர்ந்து தங்களுடைய டஃப் கொடுத்து வருகின்றனர்.
மேலும் ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் என இரு குழுவுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் வேலைகளை செய்து தருவதுதான் இவர்களுடைய வேலை.
இவ்வாறு கடந்த வாரமே இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த வாரமும் பிரச்சனைகள் ஆரம்பித்து இருக்கிறது. அப்படி பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு காபி போட்டு கொடுக்காததால் பூர்ணிமாவிடம் விஷ்ணு சண்டை போட்ட ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த வாரம் கேப்டன் யுகேந்திரன் தேர்வு செய்து மாயா, பூர்ணிமா, விஷ்ணு, சரவண விக்ரம், வினுஷா, பிரதீப் ஆகிய 6 பேரையும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான உணவுகளை சமைத்து தர வேண்டும் அதற்கான மெனுவையும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் முடிவு செய்து எழுதிக் கொடுத்துள்ளனர். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் ஹவுஸ் மேட் எப்பொழுது காபி அல்லது ஸ்னாக்ஸ் கேட்டாலும் அதையும் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான் செய்து தர வேண்டும் என்பது விதி.
அப்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள ரவீனா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள பூர்ணிமாவிடம் தனக்கு காபி வேண்டும் என கேட்டுள்ளார் இதற்கு பூர்ணிமா போட்டு தர மறுத்துள்ளார். இதனால் கடுப்பான விஷ்ணு பூர்ணிமாவை திட்டியதோடு பர்சனல் கோபத்தை எல்லாம் கேம்ல காட்டாத என எச்சரிக்கிறார்.