Bigg Boss season 7 today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில் 7வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நடந்த பாதைகள் குறித்து கூறுவதற்கான வாய்ப்பு தரப்படும். அப்படி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நடந்த சோக கதைகளை கூறியிருக்கும் டாஸ்க் நடைபெற்றுள்ளது.
அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாக்கியுள்ளது கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சிவுள்ளனர்.
இந்த வார நாமினேஷனில் விசித்ரா, மாயா, பிரதீப், பூரணிமா, வினுஷா, விக்ரம், மணி சந்திரா, விஜய் வர்மா, அக்ஷயா, நிக்சன், ஐஷு ஆகியோர்கள் சிக்கி உள்ளனர். இவர்களிலும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர்கள் இந்த வாரத்தின் இறுதியில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்கள்.
இவ்வாறு கடுமையான போட்டிகளுக்கு இடையே வாரம் வாரம் பல்வேறு டாஸ்க்கள் தரப்பட்டு வரும் வருகிறது. அப்படி இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த பாதை பற்றி பேசி இருக்கிறார்கள் இதனால் பிக் பாஸ் வீடு கண்ணீரில் மிதக்கிறது.
அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் யுகேந்திரன் தொடங்கி வைக்க கூல் சுரேஷ் வரை போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தங்களது கதைகளை கூறுகிறார்கள். இறுதியில் கூல் சுரேஷ் நான் பேப்பர் போட்டு சம்பாதித்தது பற்றி பேசுகையில் அனைவரும் கண் கலங்கும் காட்சி ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. 30 செகண்ட் ப்ரோமோவிலேயே செண்டிமெண்ட் காட்சிகள் நிரம்பியிருக்கும் நிலையில் இந்த வாரம் முழுவதும் எமோஷ்னலான வாரமாக அமைய உள்ளது.