Vanitha vijayakumar: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி ஜோவிகா குறித்து பேசிய ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்து வனிதா விஜயகுமார் எப்படி தனது மகளை பார்த்து பிரதீப் இப்படி பேசலாம் என்று விளாசி உள்ளார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 பல விறுவிறுப்பான டாஸ்க்களுடன் நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. அப்படி இன்று ரேங்கிங் டாஸ்க் நடைபெற்ற இருக்கிறது. இந்த டாஸ்கில் ஆரம்பித்தவுடன் தங்களுக்கு தகுதியான இடங்களில் நின்று கொள்ள வேண்டும்.
டைட்டான உடையில் தாராளமாக காட்டும் நடிகை பிரிகிடா.. வைரலாகும் புகைப்படம்.!
அப்படி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் இடத்தில் வேறு எந்த போட்டியாளராவது நின்றால் அவர்களிடம் வாக்குவாதம் செய்து தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்து தனக்கான இடத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சூழலில் பிரதீப் ஆண்டனி முதல் இடத்தில் நிற்க இரண்டாவது இடத்தில் ஜோவிகா பிடித்துள்ளார்.
ஜோவிகா தனக்கு முதலிடம் தான் வேண்டும் என பிரதீப் ஆண்டனிடம் வாக்குவாதம் செய்ய பிரதீப் ஆண்டனி தான் ஏழை நீ பணக்காரப் பெண் எனவே எனக்கு இந்த பணம் மிகவும் முக்கியம் இதை வைத்துதான் நான் படத்தினை இயக்க வேண்டும் என தனது சொந்த கதையை வைத்து சண்டை போடுகிறார்.
எனவே இதுகுறித்து வனிதா விஜயகுமார் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு அம்மாவின் மகள்தான் ஜோவிகா என்றும் உன்னிடம் காசு இல்லைன்னு புலம்புவதற்காக ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது ஜீப்பான கேம் என்றும் பிக் பாஸ் வீட்டில் வரும் பணத்தை வைத்து இவ்வாறு படம் தயாரிக்க வேண்டும் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்த உருட்டு, திறமை இருந்தால் நல்லா நடிச்சா மத்தவங்க பணம் போட்டு உன் படத்தை தயாரிக்க போறாங்க என மரணமாக கலாய்த்துள்ளார்.