பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதன் முறையாக நடந்த ஓபன் நாமினேஷன்.. கையெழுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட ரவீனா

Bigg Boss season 7 today promo: பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். அப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 15 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறியதை தொடர்ந்து பவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார். 3வது வாரமான நேற்று மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பற்றி விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதன் முறையாக நடந்த ஓபன் நாமினேஷன்.. கையெழுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட ரவீனா

இந்த வார கேப்டனாக பூர்ணிமா இருந்து வரும் நிலையில் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் முதன்முறையாக பிக் பாஸ் 7வது சீசனின் ஓபன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதனால் அனைத்து போட்டியாளர்களும் சம கடுப்பில் இருந்து வருகின்றனர்.

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் என கூறியதும் அனைத்து  போட்டியாளர்களும் ஆர்வமுடன் இருக்கின்றனர். அப்படி முதலில் விஷ்ணு பிரதீப்பை நாமினேட் செய்வதாக கூறுகிறார். இவரை அடுத்து வினுஷா, விசித்ரா, போன்றவர்களும் பிரதீப்பை நாமினேட் செய்கின்றனர்.

சொந்த காசை கொடுத்து படக்குழுவினரை மீட்ட அஜித்..! முக்கிய பிரபலம் சொன்ன ரகசியம்

இவர்களை தொடர்ந்து பூர்ணிமா, ஐஷூ இருவரும் ரவீனாவை காரணமாக கூறி மணியை நாமிநேஷன் செய்கிறார்கள். எனவே ரவீனா மணி இடம் கையெழுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார். மீண்டும் மாயா மணியை பிற்போக்குவாதி எனக் கூறி நாமினேட் செய்கிறார். இவர்களை தொடர்ந்து மணி, பிரதீப், யுகேந்திரன் மூவரும் மாயாவை நாமினேட் பண்ண மாயா கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.