Bigg Boss season 7 today promo 1: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 16 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு வாரத்தின் தொடக்கத்தில் யார் கடந்த வாரம் சுவாரஸ்யம் குறைவாக இருந்தார்களோ அவர்களை தேர்வு செய்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஸ்மால் வாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு தேவையான உணவுகள் மற்றும் வேலைகளை செய்து தர வேண்டும். எனவே இதனால் ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் மற்றும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் இடையே தொடர்ந்து சண்டைகள் நிகழ்ந்து வருகிறது. அப்படி கடந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த மாயா, பிரதீப் மற்றும் விஷ்ணு போன்றவர்களை கமல் ஹாசன் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க அவர்களால் பதிலே சொல்ல முடியவில்லை.
எனவே இதனால் ஆவேசத்துடன் விளையாண்டு வந்த மாயாவிற்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயாவை கூல் சுரேஷ் தரக்குறைவாக பேசி உள்ளார். அதாவது திடீரென கூல் சுரேஷ் விசித்ரா காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
இது காமெடியாக அமைகிறது இதனை அடுத்து மாயாவை பார்த்து மறைந்திருந்து பார்க்கிற மாயா நீ இந்த பக்கம் கொஞ்சம் வாயா என்று காமெடியாக கூறியதை சக போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து ரசிக்க மாயா முறைத்துப் பார்க்கிறார். இதனை அடுத்து அவர் மீண்டும் மாயா பயங்கர காண்டாக இருக்கிறார் எனவும் கூறியது மாயாவுக்கு மேலும் கடுப்பாகிறது.
எனவே நேரடியாக கூல் சுரேஷிடம் நீங்கள் என்னை பற்றி சொன்ன விஷயங்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு கைதட்டல் வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லலாமா என்று கேட்க பூர்ணிமாவும் மாயாவுக்கு ஆதரவாக பேசுகிறார். பிறகு மாயா தனியாக அமர்ந்து வாழும் காட்சி இடம் பெற்றுள்ளது.