Bigg Boss season 7 today promo 1: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7, 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு தற்பொழுது 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்thu முதல் வாரம் அனன்யா வெளியேறியதை அடுத்து பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் சீசன் 7 முந்தைய சீசன்களை விட பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஆரம்பத்திலேயே ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என போட்டியாளர்களை இரண்டு குழுவினர்களாக பிரித்துள்ளனர். வாரத்தின் இறுதியில் சுவாரசியம் குறைவாக இருந்த நபர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இவ்வாறு இதற்கு தண்டனையாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து தருவது மற்றும் மற்ற வேலைகள் என அனைத்தையும் இவர்கள் தான் செய்தாக வேண்டும். இதனால் ஸ்மால் பாஸ், பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.
அப்படி சென்ற வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கு உணவு தராமல் ஸ்ரைக் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமலஹாசனும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை இந்த வாரம் வச்சி செய்தார். இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வேல் மாயா, பூர்ணிமா நாமினேட் யாரை யாரை பண்ணலாம் என்பது குறித்து பேசி வருகின்றனர்.
அப்படி வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணு எல்லார்கிட்டயும் பிரச்சனை செய்வதால் அவரை இந்த வாரம் எல்லாரும் நாமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக மாயா கூற அதே போல் பிரதீபையும் எல்லாரும் நாமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார். இஷூ என்னை செய்ய வாய்ப்பு இல்லை என்று மாயா கூற ஆனால் இஷு என்னை செய்வார் என்று பூர்ணிமா கூறுகிறார். மேலும் ரவீனா, விசித்ராவை நான் இந்த வாரம் செய்ய போகிறேன் என்று மாயா கூற உடனே பூர்ணிமா நான் மணி மற்றும் விசித்ராவை செய்யலாம் என்று இருப்பதாக கூற இருவரும் பேசிக் கொள்கின்றனர்.