Bigg Boss season 7 today promo 1: விஜய் டிவியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையான சண்டைகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை பார்த்து வருகிறோம். கடந்த 6 சீசன்களை விட 7வது சீசன் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
அதன்படி போட்டியாளர்களும் தொடர்ந்து கண்டென்ட் கொடுப்பதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி இந்த வாரம் கமல் ஹாசன் கேப்டனான சரவணன் விக்ரமை சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பிக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. வாரம் வாரம் மக்கள் சனி, ஞாயிறு எபிசோடுக்காக காத்து வருவது வழக்கம்.
இந்த எபிசோடில் தான் கமல் ஹவுஸ்மேட்ஸ்களை வச்சு செய்வார் அப்படி சனி கிழமையான நேற்று ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை ஒரு வழி செய்தார். அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல் படாத பாடுபடுத்தினர்.
எனவே இவ்வாறு ஸ்ட்ரைக் செய்வதற்கும் ஒரு நியாயம் வேண்டும் என கூறினார். இதனை அடுத்து தற்போது வெளியாகியிருக்கும் இன்றைய ப்ரோமோவில் கமல் ஹாசன் நேத்திக்கு இவங்கள்ட பேசினதுல புரிஞ்சது என்னன்னா ரைட்டு பண்றாங்களோ தப்பு பண்றாங்களோ ஆனா கன்டெண்ட் பண்றதுல ரொம்ப ஆர்வமா இருக்காங்க.
சரி தலைவரு தலைவருனு ஒருத்தரு இருக்காரு இல்லையா அவர் எல்லாத்தையும் பாகுபாடு பண்றதுல ஆர்வமா இருக்காரு எல்லாருக்கும் அதிற்ப்தி இருக்கு தலைமைக்கும் ஒரு தகுதி வேண்டும் அதை இங்க நம்ப பேசுறதுக்கு பதிலா அவர் கிட்டயே கேட்டு விடலாம் என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.