Bigg Boss season 7 promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சண்டை, சச்சரவுகளில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் சலித்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்த ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
இந்த வாரம் நாமினேஷன் நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் இதில் பெரும்பாலானவர்கள் விஷ்ணுவை தான் குறி வைத்திருக்கிறார்கள். மேலும் அக்ஷயா, மாயா போன்றவர்களும் சிக்கியுள்ளனர். அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் ஆவேசமாக பேசிக் கொள்கிறார்கள்.
அதன்படி அடுத்த வாரம் நம்மில் ஒருவர் கேப்டன் ஆனால் அதன் பிறகு வேற கேம் இருக்கும் என்று மாயா ஆவேசமாக கூறுகிறார். அடுத்த வாரம் கண்டிப்பாக நம்மில் ஒருவர் தான் கேப்டன் ஆக வேண்டும் என்றும் அதன் பிறகு இருக்கு வேடிக்கை என்றும் கூற இதற்கு விஷ்ணு, பிரதீப் ஆதரிக்கின்றனர்.
மேலும் மீண்டும் மாயா அடுத்த வாரம் கண்டிப்பாக நம்மில் ஒருவர் தான் கேப்டன் ஆகணும் என்று ஆணித்தரமாக சொல்ல அடுத்தடுத்து வாரம் கேப்டன் பதவிக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் பிக் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் மேல் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இரு அணிகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள். எனவே இதனால் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி ஸ்மால் ஹவுஸில் இருக்கும் மாயா, பிரதீப், விஷ்ணு இவர்கள் மூவரில் ஒருவர் கேப்டன் ஆகிவிட்டால் கேம் வேற லெவலில் இருக்கும் சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது.