பவா செல்லத்துரை போலவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என கதறும் போட்டியாளர்..

Bigg Boss season 7 Tamil Today promo
Bigg Boss season 7 Tamil Today promo

Bigg Boss season 7 Tamil Today promo: உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பவா செல்லதுரை வெளியேறிய நிலையில் தற்போது இவரை போலவே மேலும் ஒரு பெண் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறி கதறும் அழும் வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரை அடுத்து அடுத்த நாளே பவா செல்லதுரை உடல்நிலை குறைவு காரணமாக வெளியேறினார்.

இவ்வாறு ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறிய காரணத்தினால் கடந்த வாரம் எவிக்ஷன் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வாரம் 16 போட்டியாளர்களுக்கும் கடுமையாக டாஸ்க்கள் வைக்கப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக விளையாண்டு வருகிறார்கள்.

இவ்வாறு விளையாடும் பொழுது சிலருக்கு அடிபடுவதும் வழக்கம் அப்படி உடல்நிலை சரியில்லாமலும் இருந்து வருகிறார்கள். ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள், பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் இருவரும் ஒவ்வொருவருக்கும் சலித்தவர்கள் இல்லை என்பதை விளையாட்டின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வினுஷா தேவி டாஸ்க் சரியாக ஈடுபட முடியவில்லை என மன அழுத்தத்திற்கு உள்ளாகி நான் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக கேப்டன் யுகேந்திரனிடம்  கூறிவுள்ளார்.

வினுஷா அழுது கொண்டிருப்பதை பார்த்து மாய, பிரதீப் மற்றும் யுகேந்திரன் ஆறுதல் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் 20 நாட்களில் இருந்ததே பெரிய விஷயம் என்றும் இன்னும் சில நாட்கள் நீங்கள் தாக்குப் பிடிக்க வேண்டும் எனவும் உங்களால் முடியும் என்றும் விளையாடுங்கள் என மாயா கூறுகிறார். அதேபோல் யுகேந்திரனும் கூற வினுஷா மனம் மாறுவாரா என எதிர்பார்க்க படுகிறது.

https://x.com/BBFollower7/status/1715226866313998415?s=20