பூர்ணிமா, நிக்சனால் ஹவுஸ் மேட்ஸ்களை பெட்ரூமில் இருந்து துரத்தி விட்ட பிக் பாஸ்.. கதறும் கூல் சுரேஷ்

Bigg Boss season 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. போன வார கேப்டன் ஆக இருந்த மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக சண்டை போட்டு வந்தார்.

மாயாவோடு சேர்ந்து அவருடைய ஏஜென்ட் டீம் செய்த வேலைகள் மக்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தியது. எனவே இதனால் கமல்ஹாசன் மாயாவின் ஏஜென்ட் டீமை வெளுத்தெடுத்தார். அப்படி கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று ஐஷூ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

காக்கா, கழுகு கதை தெரியும்.. ரஜினி சொன்ன தக்காளி கதை கேட்டு இருக்கீங்களா.! வியந்து போன ரசிகர்கள்

மேலும் இந்த வார கேப்டன் ஆக தினேஷ் இருக்கும் நிலையில் பூர்ணிமா, மாயாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்து வருகிறது இதனால் பூர்ணிமா கதறி அழுத காட்சிகளும் பார்க்க முடிந்தது. நேற்று தீபாவளி ஸ்பெஷல் ஆக புகழ், ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் வந்திருந்தனர்.

தற்பொழுது இன்றைய முதல் ப்ரோமோவில் டாஸ்க் நடைபெறுகிறது இதில் பூர்ணிமா தோற்று விட பெரிய பெட்ரூமில் இருக்க முடியாது என காலி செய்து கொண்டிருக்கின்றனர். அதாவது பிக் பாஸ் சுமைதாங்கி டாஸ்கில் தோற்றால் பெரிய பெட்ரூம் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

18 வயதிலேயே பல கோடிக்கு அதிபதியாக இருக்கும் தெய்வத்திருமகள் குழந்தை நட்சத்திரம் சாரா..? முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தனது தலையாலும் தலைக்கு மேல் இருக்கும் கட்டை இதுக்கு இடையே பலகை ஒன்றை வைத்து தலைகளால் தாங்கி பிடிக்க வேண்டும் இதில் பலகை கீழே விழுந்தால் டாஸ்க்கில் தோற்றுவிட்டதாக அர்த்தம்.

அப்படி ஹவுஸ் மேட்ஸ்கள் விளையாடிக் கொண்டிருக்க நிக்சன் உடைய பலகை கீழே விழுகிறது உடனே கூல் சுரேஷ் என எலிமினேட் பண்ணுங்க சார் என கூறிவிட்டு சொல்கிறார். பிறகு பூர்ணிமாவின் பலகையும் விழுந்த விட இதனால் அனைவரும் தோற்று விடுகின்றனர் பிறகு பிக் பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்தில் பெட்ரூமின் கதவுகள் மூடப்படும் என சொல்ல அனைவரும் துணிமணிகளை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.