Bigg Boss season 7 Tamil promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் ஸ்மால் பாஸ் என்ற புதிய விதிமுறை உடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது சரியாக விளையாடாதவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் அனைத்தையும் சமைத்து தர வேண்டும். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் செய்து தர வேண்டும்.
இவ்வாறு இருக்கையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியார்களுக்கு சமைத்து தர முடியாது என கூறியுள்ளனர். அதாவது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் போர்டில் தங்களுக்கு விருப்பமான உணவுகளை எழுதி தர வேண்டும் அதனை தான் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைக்க வேண்டும் இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எழுதிய டிஷ்ஸை சமைத்து தர முடியாது என ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கூற இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிக் பாஸ் வீட்டுக்காரர்களிடம் ஸ்மால் பாஸ் வீட்டுக்காரர்கள் சமைக்க முடியாது என மறுத்திருக்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் வெளியானது. இதனை அடுத்து இரண்டாவது ப்ரோமோவில் பிரதீப் மற்றும் ஜோவிகாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது இரண்டாவது ப்ரோமோவில் நாங்க ஆறு பேரு மட்டும் கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருக்கிறோம் அதை குறை வேற சொல்றீங்களா என்று பிரதீப் கோவத்துடன் கேட்கிறார்.
எனவே இதற்கு ஜோவிகா சமைப்பது உன்னுடைய வேலை அதை நீ செய்து தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு பிரதீப் அதற்கு என்னை நீ அடிமை மாறி நடத்துவியா என்று கேட்க, சரிடா சரிடா என் சாப்பாடு நான் வேஸ்ட் பண்றதா வைத்துக்கொள், அதற்காக எப்படி நீ சமைக்க மாட்டேன்னு கூறலாம் சமைப்பது தாண்டா உன்னுடைய வேலை அதற்காகத்தான் நீ அந்த வீட்டில் இருக்கிறாய் என்று சொல்ல இதற்கு பிரதீப் இந்த வீட்ல இருந்தா கண்டெண்ட் கொடுக்கணும் கொடுத்திங்களா என கேட்க அது உன்னுடைய பிரச்சனை கிடையாது என சொல்ல அப்ப சமைப்பதும் உன்னுடைய பிரச்சனை கிடையாது என ஜோவிகா கூற மாறி மாறி இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.