கோல்டன் ஸ்டார்க்காக இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்.. விடாமல் ஜோவிகாவை நோண்டும் விசித்ரா.! அதிரடியான ப்ரோமோ

bigg boss
bigg boss

Bigg Boss season 7 promo: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் ஸ்டார்க்கான டாஸ்க் நடைபெற போட்டியாளர்கள் அனைவரும் பெரும் வாக்குவாதம் செய்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அப்படி முதல் வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறியுள்ளார்.

இவரை தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் ஆவேசத்துடன் விளையாடி வருகின்றனர். அப்படி ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் மாயா அனைவரிடமும் நம்மில் ஒருவர் தான் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும். அதுக்குப் பிறகுதான் கேமே வேற லெவலில் இருக்கும் என விஷ்ணு,  பிரதீபிடம் கூற இதனை ஆதரிக்கின்றனர்.

இதனை அடுத்த தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோல்ட் ஸ்டாருக்கான டாஸ்க் வாரம் வாரம் நடக்கும் அதில் வென்று அதிக கோல்டு ஸ்டார்களை கைவசம் வைத்துள்ள நபர்கள் அதன் மூலம் எலிமினேஷனில் இருந்து ஒருமுறை தப்பித்துக் கொள்ள முடியும். அப்படி கடந்த வாரம் கோல்டு ஸ்டார் டாஸ்க் சரவணன் விக்ரம் வெற்றி பெற்றார்.

இதன் அடுத்து இந்த வாரத்திற்கான கோல்டு ஸ்டார் டாஸ்க் நடைபெற்று உள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களைவிட தான் எந்த விதத்தில் மக்களை என்டர்டைன்மெண்ட் செய்திருப்பதாக சொல்லி விவாதிக்க வேண்டும் அப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள்.

ப்ரோமோவின் ஆரம்பத்தில் மாயா இந்நிகழ்ச்சியில் நான் அதிகமாக கிசுகிசுப்பு பேசியுள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து விஷ்ணு, பூர்ணிமா, விஜய் வர்மா, ஐஷூ, யுகேந்திரன் என ஒவ்வொரு போட்டியாளர்களாக வந்து தங்களுடைய விவாதத்தை முன்வைக்கின்றனர். கடைசியாக ஜோவிகா தன் விவாதத்தை கூறுகிறார். அதாவது சீரியஸ் ஆன விஷயத்திலும் நான் இருக்கிறேன், காமெடியான விஷயத்திலும் நான் இருக்கிறேன் என ஜோவிகா சொன்னதும் வேண்டுமென்றே சில விஷயங்களை பேசுறியா? என விசித்ரா கேள்வி எழுப்பும் காட்சிகளும் பெற்றுள்ளது.