Bigg Boss season 7 promo: கடந்த வாரம் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒளிபரப்பாக தொடங்கிய முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் சண்டை, சச்சரவுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடி வருகிறார்கள். அப்படி இந்த சீசன் தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு பல மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.
அதாவது இரண்டு பிக் பாஸ் வீடுகள் மற்றும் புதிய விதிமுறைகள் போன்றவை இடம்பெற்றுள்ளது. இதுவரையிலும் மற்ற சீசனங்களில் முதல் வாரம் எவிக்ஷன் நடைபெற்றது கிடையாது ஆனால் இந்த சீசனில் முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறி உள்ளார்.
இவரைத் தொடர்ந்து இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு நிமிஷம் கூட பிக் பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என பவா செல்லதுரையும் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த வாரம் நாமினேஷனில் விஷ்ணு, மாயா மற்றும் அக்சயா போன்றவர்கள் சிக்கி உள்ளனர்.
இதனை அடுத்த தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதாவது பிக் பாஸ் கவனித்தபடி இவர்கள் இருவரும் தான் சுவாரஸ்யம் குறைவானவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி அக்ஷயா மற்றும் வினுஷா தேவி ஆகியவர்கள் இந்த சீசனில் முதல் முறையாக சிறைக்கு சென்றுள்ளனர்.
அக்ஷயா ஜெயிலுக்கு செல்ல உள்ளதாக பிக் பாஸ் அறிவிக்க இதனை ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கைதட்டி கொண்டாடுகின்றனர் எனவே இதனால் மணமுடைந்து அக்ஷயா கேமரா முன் என்று அழும் காட்சிகளும் வெளியாகி இருக்கிறது.