Bigg Boss 7: விஜய் டிவியில் கடந்த 1ஆம் தேதியன்று பிக்பாஸ் 7 சீசன் தொடங்கப்பட்ட நிலையில் இது குறித்த ப்ரோமோக்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7ல் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்தார்.
இவரையடுத்து 17 பேர் என்ட்ரிக் கொடுத்துள்ளார்கள். கடந்த 6 சீசன்கள் சிறப்பாக நிறைவடைந்த நிலையில் தற்பொழுது 7வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதற்காக அவருக்கு 130 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் மற்ற சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமான முறையில் இரு வீட்டிற்கு ஒரே வாசல் வைத்து அதில் ஒரு வீட்டில் ஆறு போட்டியாளர்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளனர். இதில் விசித்ரா, வினுஷா தேவி, ஜோவிகா, பவா, செல்லதுரை, பிரதீப், கேப்டன் விஜய், ஸ்கூல் சுரேஷ் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தற்பொழுது தொடர்ந்து அன்றைய தின நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோக்களும் வெளியாகி வருகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சப்பாத்தி குருமாவை திட்டமிடாமல் செய்தது ஏன் என்று பிரதீப் கேள்வி எழுப்ப நேற்றைய தினம் அனைவரும் இணைந்து தீர்மானத்த பொழுது பிரதீப் என்ன செய்துக் கொண்டு இருந்தார் என்று கேப்டன் விஜய் கேள்வி எழுப்புவதாக தெரிகிறது இது இரண்டாவது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பிரதீப் டவலாட்டிக் கொண்டிருந்ததாகவும் அதனால் அவரிடம் எதையும் கேட்க முடியாது என்றும் கேப்டன் விஜய் கூறுகிறார். இதனால் கடுப்பான பிரதீப் எனக்கு தேவையான உணவை கரும்பலகையில் எழுதி விட்டு செல்கிறேன் அன்றைய தினம் எனக்கு சிக்கன் ப்ரை வேண்டும் என்று கூறுகிறார். தொடர்ந்து பேசும் கேப்டன் விஜய் டீ, காபி மற்றும் ஸ்னாக்ஸ் மட்டும் தான் கேட்கும் பொழுதெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் சொல்ல இதனால் இன்றைய ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.