Bigg Boss season 7 today promo 1: தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் மற்றும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் இடையே கடுமையான டாஸ்க்குகள் கொடுத்து வருகிறார். அப்படி போட்டியாளர்களும் தங்களது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் தோற்றுப் போனவர்கள் உடை மாற்ற முடியாது என்றும் தான் நான் சொல்லும் வரை இருக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் கூறிய நிலையில் இதனை அடுத்து இன்றைய டாஸ்க்கில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு சாப்பாடு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு பந்தை உருட்டி விடும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டாஸ்க்கில் யுகேந்திரன், ரவீனா, மணி ஆகியோர்கள் விளையாடுகின்றனர். இந்த டாஸ்க் முடிந்ததும் தோல்வி அடைந்தவர்கள் பிக் பாஸ் வீட்டில் சமைக்கும் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்று பிக் பாஸ் அறிவிக்கிறார்
அப்பொழுது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு பசிக்குது பிக் பாஸ் என்று பரிதாபத்துடன் ரவீனா கூற இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மாயா சாப்பிட்டுக் கொண்டே சிரித்து நக்கல் அடிக்கிறார். இதனால் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இவ்வாறு கடும் போட்டிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.