விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் கடுப்பிலிருந்து வருகிறார்கள். மேலும் யூடியூப் பிரபலங்கள் பலரும் ராபர்ட் மற்றும் ரட்சிதாவை வச்சி செய்து வருகிறார்கள். அதாவது இந்த ப்ரோமோவில் ராஜாவுக்கும் ராணிக்கும் பிக்பாஸ் கொடுத்து உள்ள ரொமான்டிக் டாஸ்க் தெரியவந்துள்ளது.
அதாவது வாரம் வாரம் பிக்பாஸ் வீட்டில் லக்ஸ்சொரி பட்ஜெட் டாஸ்க் நடைபெறுவது வழக்கம் இதனால் பலரும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்த டாஸ்கின் பொழுது சண்டைகள் ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ராயல் மியூசியம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று விக்ரமன், அசீம் இவர்களுக்கு இடையே கடும் சண்டை நிலவியது. இப்படிப்பட்ட நிலையில் இன்று ரட்சிதாவும், ராபர்ட் மாஸ்டரும் ராஜா ராணியாக உள்ளனர் ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவின் மீது காதல் வலை வீசி வருகிறார் மேலும் அடிக்கடி அதே போல் பேசி வருவதால் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.
ஏனென்றால் ரட்சிதாவிடம் முத்தம் கேட்பது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என சொல்வது, அவரை கட்டிப்பிடிப்பது, கையைப் பிடித்து இழுப்பது என பலவற்றை செய்து வருவதால் ரட்சிதாவின் கணவர் கூட ராபர்ட் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதனால் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் மாஸ்டரை வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ராஜா ராணி டாஸ்க்கில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரட்சிதாவையும் ஜோடி சேர்த்துவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் பிக்பாஸ். கடுப்பை கிளப்பும் வகையில் இவர்களுடைய ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் வெளிவந்துள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் ஒளிபரப்பாகும் தில்லானா தில்லானா பாடலுக்கு ரட்சிதாவையும் ராபர்ட் மாஸ்டரையும் ஆட்டம் போட வைத்துள்ளார் பிக்பாஸ் இதுதான் சான்ஸ் என ராபர்ட் ரட்சிதாவை தொட்டு தடவி எல்லை மீறி வருகிறார். இவ்வாறு ராபர்ட் மாஸ்டரை பற்றி தெரிந்து கொண்டும் பிக்பாஸ் இதுபோன்று டாஸ்கை கொடுத்து உள்ளார் என நெட்டிசன்கள் பிக்பாஸ் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரையும் விளாசி வருகின்றனர்.